LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

குடசப்பாலை

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

வலுவான கிளைகளைக் கொண்ட இதன் பட்டை தடிப்புடையதாகச் சொரசொரப்பான பொருக்குகளுடன் பழுப்பு நிறமாக இருக்கும். இதன் பட்டை, இலை, விதை ஆகியன மருத்துவப் பயனுடையவை. குடசப் பாலை (Holarrhena antidysenterica) என்பதை குழிசிப் பாலை என்றும் சொல்லுவது உண்டு. (குழிசி = குடம்;குழிசிப்பாலை>குளசிப்பாலை>குளப்பாலை.) இதைக் குத்துப் பாலை, கசப்பு வெட்பாலை என்றும் கூடச் சிலர் சொல்லுவார்கள். "வடவனம் வாகை வான்பூங் குடசம்" என்று பல்வேறு பூக்களைச் சொல்லும் இடத்தில், குறிஞ்சிப் பாட்டின் 67 - ஆம் வரி சொல்லும். வான்பூ என்பது வெள்ளைப்பூ என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடு.
சர்ம நோய்களுக்கும், சர்ம பராமரிப்புக்கும் தேவையான பல மூலிகைகள் ஆயுர்வேதத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று குடசப்பாலை.
குடசப்பாலையின் இதர பெயர்கள் – வெட்பாலை, குளப்பாலை
குடசப்பாலை ஒரு சிறு மரம் அல்லது பெரிய செடி 12 (அ) 15 அடி உயரம் வளரும். மரத்தில் எந்த பாகத்திலும் சிறிது காயப்படுத்தினாலே, பால் கசியும் மரப்பட்டை பழுப்பு நிறத்தில் இருக்கும். இலைகள் 8 லிருந்து 24 செ.மீ. நீளமாகவும், 4 லிருந்து 10 செ.மீ. அகலமாகவும் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறிதளவு வாசனையுடன் இருக்கும். விதைகள் காற்றில் பரவுவதற்கு ஏற்றதாக பட்டுப்போன்ற முடிகளுடன் இருக்கும். இந்தியா முழுவதும் குடாஜ மரத்தை காணலாம்.
உபயோகமாகும் பாகங்கள் – பட்டை, விதை.
பயன்கள்
தாவரவியலின் பெயருக்கு ஏற்றபடி குடசப்பாலை பேதியை நிறுத்தும். பேதிக்கு நல்ல மருந்தாகும் குடசப்பாலை. மரப்பட்டை கஷாயம் இரு வேளை தினமும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
சர்ம நோய்களுக்கு இதன் மரப்பட்டையை களிம்பாக அரைத்து பசுமாட்டு சிறுநீருடன் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசலாம்.
மரப்பட்டை கஷாயத்தை இஞ்சியுடன் சேர்த்துக் கொடுக்க, இரத்தம் கசியும் மூலநோயை கட்டுப்படுத்தலாம்.
குடசப்பாலையின் பட்டையை பொடியாக்கி, 1 ஸ்பூன் சந்தனப்பொடியை சேர்த்துக் குழைத்து பருக்கள், தழும்புகள் மேல் தடவினால் அவை மறையும்.
வயிற்றுப்பூச்சிகளை ஒழிக்கவும் குடசப்பாலையின் விதைகள் உதவுகின்றன. உலர்ந்த விதைகளின் பொடியை 1/2 ஸ்பூன் தினமும் இரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
பட்டை சாற்றை எண்ணையிலிட்டு காய்ச்சி, கரப்பான், சொறி, சிரங்கு முதலிய சர்ம நோய்களுக்கு தடவ, அவை குணமாகும்.
பட்டையை குடிநீரிலிட்டு வாய் கொப்பளிக்க, பல் வலி நீங்கும்.
குடசப் பட்டை, மருந்துப் பொருளாயும் பயன்படுகிறது. குடச மது என்பது 12 1/2 சேர் (1சேர் என்பது இந்தக் கால வழக்கில் 280 கிலோ கிராம் ஆகும்.) மரப்பட்டை, உலர் திராட்சை 6 1/4 சேர், பேரிலை இலுப்பைப்பூ (Bassia latifolia; ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?) பெருங்குமிழ் மரப்பட்டை (Gmelina Arborea) ஆகிய இரண்டையும் ஒவ்வொன்றும் 80 தோலா (1 தோலா = 12 கிராம்) போட்டு 256 சேர் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, மொத்தக் கொள்ளளவும் 4ல் ஒன்றாகும் படி செய்து, வடிகட்டி, அதற்குப் பின்னால் பூக்கோளி விளக்கையின் (Woodfordia floribunda) பூக்களை 2 1/ 2 சேர் போட்டு, treacle 12 1/2 சேர் போட்டு குளிர்ந்த இடத்தில், மண்ணில் புதைத்து, ஒரு மாதம் நொதிக்க வைத்து எடுத்தால் கசப்பில்லாத ஒரு மது கிடைக்கும். அது விடாமல் பிய்த்துக் கொண்டு போகும் கழிச்சலுக்கும், வயிற்றாலைக்கும், மருந்தாக அமையும்
POSTED: 15/9/2015, 5:32 pmPOST 1

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum