LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

நோயின்றி வாழ கரட்டை உண்ணுங்கள்

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

இயற்கையாகக் கிடைக்கும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளை உண்பதனால் உடலுக்குத் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

இவற்றில் எல்லோராலும் விரும்பி உண்ணப்படும் கரட் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களை கொடுக்கின்றது.

பொதுவாக கரட் மலைப் பகுதியில் விளைகின்றது. அழகிய நிறத்தில் பார்பவர்களின் கண்களுக்கு உண்ணத் தூண்டும் காய்கறி வகைகளில் கரட்டும் ஒன்று.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக கரட் பயன்படுகிறது. இதில் அதிகளவு உயிர்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சமைத்தும் உண்ணலாம். அல்லது பச்சையாகவும் செய்தும் உண்ணலாம்.

குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் மிகவும் சிறந்த சத்து நிறைந்த உணவாக கரட் உள்ளது.

கரட்டில் விட்டமின் இ அதிகம் காணப்படுகின்றது. கண் எரிச்சல், கண்ணில் பாசி படிதல், மாலைக்கண் போன்றவற்றை போக்கும் குணம் உண்டு.

கண் பார்வை நரம்புகளின் வறட்சித் தன்மையைப் போக்கி கண் பார்வையை அதிகரிக்கிறது. 40 வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளெழுத்து தொந்தரவுக்கும் நிரந்தர முடிவுகட்ட கரட் உதவுகிறது.
எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலம் கொடுப்பவை. கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் சத்துக்கள் இத்தகைய சத்துக்களை அதிகம் கொண்டது கரட். முதுமையில் கல்சிய இழப்பை தீர்க கரட்டை உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்பு, பற்கள் பலவீனம் குறைந்து பலப்படும்.

மலச்சிக்கலைப் போக்கினாலே மனிதன் நோயின்றி வாழலாம். செரிமானக் கோளாறு ஏதும் வராமல் தடுத்து உண்ட உணவை செரித்து மலத்தை சீராக வெளியேற்ற போதுமான நார்ச்சத்து கரட்டில் உள்ளது.

கரட்டை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் நீங்குவதுடன் மூலநோயின் தாக்கமும் குறையும்.

மதிய வேளைகளில் உண்டு வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். வாய்வு தொந்தரவுகள் நீங்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறும். வாய் நாற்றம் நீங்கும். சருமத்திற்கு பொலிவைத் தரும். கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கரட்டை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், போலி வலிகள், களைப்பு ஏற்படாது.
சோகை நீங்கும். பிறக்கும் குழந்தை நிறமாகவும், வலுவாகவும் பிறக்கும்.

கரட்டை துருவி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில், கழுத்துப் பகுதியில் தடவி வந்தால் முகக்கருப்பு, முகச்சுருக்கம், முகவறட்சி, எண்ணெய் வடிதல் போன்றவை மாறி முகம் பளபளபக்கும். கரட்டில் தலைமுடி உதிர்வதை தடுக்கும் குணம் உள்ளது.நோயின்றி வாழ கரட்டை உண்ணுங்கள்.

கரட்டை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி பசும் பாலில் போட்டு அவித்து எடுத்து சிறிதளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தையின் எலும்புகள் பலப்படும். வளர்ச்சி சீராகும். இளைப்பு நீங்கி உடல் வலுப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கரட்டை பசும் பாலில் அவித்து அதனோடு காய்ந்த திராட்சை பழம் சேர்த்து தேன் கலந்து கொடுத்து வந்தால் உடல் வலுப்பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
POSTED: 14/9/2015, 8:48 pmPOST 1

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum