LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

எல்லோருக்கும் நெய் தரலாமா?

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

ஏற்கெனவே உடலில் அதிகக் கொழுப்பு சேர்ந்து அவதிப்படுகிறவர்களுக்கு நெய் மேலும் துன்பத்தை அல்லவா தரும்..?’ என்ற கேள்வி எழக்கூடும்! ஆனால், இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! உடலின் இயல்பான செயல்பாட்டுக்குக் கொஞ்சமாவது கொழுப்புச் சக்தி தேவை. சுத்தமாக, கொழுப்பே இல்லாத உணவு சாப்பிட்டால் சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடும்.

தோல் வறண்டு போய், நரம்புகள் தளர்ந்து இளம் கிழவர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுவிடும்! ஆயுர்வேதத்தில் எந்தெந்த நிலைமை யில் நெய் சாப்பிடக்கூடாது என்று இருக்கிறது. அதன்படி பார்த்தால் கொழுப்பு ஏற்கெனவே ஏகமாகச் சேர்ந்து, அதனால் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு நெய் சாப்பிடச் சொல்லி எந்த ஆயுர்வேத டாக்டரும் ஆலோசனை தரமாட்டார்கள்.

ஜீரண சக்தி நன்றாக இருக்கும்போதும் சளி போன்ற கபம் சம்பந்தமான நோய்கள் இல்லாதபோதும் மட்டுமே நெய் சாப்பிடுவது நல்லது. ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை நெய்களும் கூட இப்போது விற்பனைக்கு வந்துவிட்டன. நெய்யில்கூட பசுவின் நெய்யையும் எருமைப்பால் நெய்யையும் கலப்படம் செய்யக்கூடாது. கலப்பட நெய் பொதுவாக முழுமையாகப் பலன் தராது.
POSTED: 7/10/2015, 11:43 pmPOST 1

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum