LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

வல்லாரை கீரையின் மகத்தான மருத்துவ குணம்

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

வல்லாரை ச‌த்துக்க‌ள்:

1. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து ‘எ’, உயிர்சத்து’சி’ மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.

2. இரத்தத்திற்க்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.

3. இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன.
பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.

4. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

5. சீன மற்றும் திபெத்திய மருத்துவ முறைகளிலும் வல்லாரைக்கு தனிஇடம் உண்டு.

6. வல்லாரையில் இருவகை உண்டு: சமவெளி வல்லாரை – வெளிர் பச்சை நிற இலைகளுடையது.

7. மலைப்பகுதிகளில் வளரும் வல்லாரை: கரும்பச்சை இலைகளுடையது. இதில் மலைப் பகுதிகளில் வளரும் வல்லாரைக்கு வீரியம் அதிகம் என்று நம்பப்படுகிறது.

8. எனவே தான், இதனை சரசுவதிக் கீரையென்றும் அழைக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்:

1. இரத்த சுத்திகரிப்பு வேலையைச் செவ்வனே செய்யும்.
2. உடல்புண்களை ஆற்றும், வல்லமைக் கொண்டது.
3. தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது, உடற்சோர்வு,
பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக்
கொண்டது.
4. மனித ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது.
5. இதனைக் கொண்டு பல்துலக்கினால், பற்களின் மஞ்சள் தன்மை நீங்கும்.
6. நரம்பு தளர்ச்சியை குணமாகி, மூளைச் சோர்வை (Mental fatique) நீக்கி
சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
7. அஜீரணக் கோளாறுகளை குறைக்கும்.
8. கண் மங்கலை சரி செய்யும்.
9. சீத பேதியை நிறுத்தும்.
10. இது தவிர நாள்பட்ட எக்சிமா, பால்வினை நோய்கள் வெண்குஷ்டம் போன்ற பல
நோய்களுக்கும் வல்லாரை அருமருந்தாக விளங்குகிறது.
11. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை
இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கும் வழக்கம்
தென்னிந்தியாவின் பல பகுதிகளில் உள்ளது.
12. சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு,
காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.
13. வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல்
நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
14. வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை
வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய
பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது.
15. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர்
தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

வல்லாரை சில எளிய வைத்தியங்கள்:

a. இரத்த சோகை (Anaemia):

1. 1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1
மாதம் அருந்தவும்.

2. பார்வை மங்கல், உடற்சோர்வு, நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவு

3. வல்லாரை இலைகளை காயவைத்து பொடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் 1/4
தேக்கரண்டி சூரணத்தை தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து அருந்தவும்.

b. ஆறாத புண்கள், எக்சிமா, சோரியாசிஸ்:

1. வல்லாரை இலையை பசும் நெய்யோடு சேர்த்து கொதிக்க வைத்து ஆறிய பின் மேலே தடவும்.

c. தூக்கமின்மை:

1. 1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து
வடிகட்டி இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.

d. ஞாபகமறதி:

1. 5 வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்து
தினமும் உண்ணவும்.

e. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று
அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த
விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.

f. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து
அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம்
உண்டாகும்.

g. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3,
மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு
அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

h. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால்
100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால்,
முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

i. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி,
தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து
சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

j. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி,
தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள்
சரியாகும்.

k. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே
உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை
இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய்
குணமாகும்.

வீக்கம், கட்டிகள் மறைய:-

வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி
ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும்.

அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாக:-

இலைச்சாற்றைப் பிழிந்து சம அளவு நெய் சேர்ந்து பாதிக்கப்பட்ட இடத்தில்
பூசி வர வேண்டும்.

சமைத்து உண்ணும் முறை:

1. வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி
சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

2. வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து
சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு
ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக்
கூட்டாக வைக்கலாம்.

3. இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல்,
மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள்
குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

4. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று
விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.

5. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக்
கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர,
மாலைக்கண் நோய் குணமாகும்.

6. காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில் மிளகுடன் உண்டு வர உடற்சூடு தணியும்.

7. இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற
வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.

8. இக்கீரையை, தினமும் சமைத்து உண்ணலாம். இதன் சத்துக்கள் முழுமையாகக்
கிடைக்க, சித்த மருத்துவம் கீழ்கண்டவற்றை உரைக்கிறது.

1. இதனை உண்ணும் காலங்களில் மாமிச உணவுகள், அகத்திக் கீரை பாகற்காய்
ஆகியவற்றினை உண்ணக்கூடாது.

2. புளி மற்றும் காரத்தினை மிகக் குறைவாகவே உண்ண வேண்டும்.

3.சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.

Thanks : ilaimaruththuvam
POSTED: 14/9/2015, 9:07 pmPOST 1

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum