LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

பருக்களின் சிகப்புத் தழும்புகள் மறைய சூப்பர் டிப்ஸ்!

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

முகத்தில் தோன்றிடும் பருக்களால் பலருக்கும் சிரமங்கள் உண்டு. அசிங்கமாகத் தெரிவதும் வலி இருப்பதும் மட்டுமல்ல பரு மறைந்தாலும் அதனுடைய தழும்புகள் மறையாமல் நம்மை வதைக்குமே. என்னென்னவோ முயற்சித்தும் பருக்களின் தழும்புகள், குறிப்பாக சிவந்த வீக்கம் குறையவில்லையா? அப்படியானால் இந்தக் கட்டுரை உங்களுக்குத் தான். இங்கே பருக்களைப் பற்றியும், அதன் தழும்புகளை போக்கவும் விரிவான தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பருக்கள்:

நாம் பேச்சு வழக்கில் பரு என்று சொல்வதை மருத்துவ வார்த்தையில் பாபுலஸ் என்று சொல்கிறார்கள். பஸ்ட்யூல் என்றும் சொல்வதுண்டு. பெரும்பாலும் முகத்திலும், பிற வெளியில் சருமம் படுகின்ற இடங்களில் தான் அதிகளவு பருக்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது. பருவில் அதிகளவு எண்ணெய்,அழுக்கு,பாக்டீரியா ஆகியவை இருக்கும். இவை அதிகமாக சேர்ந்தால் நம் உடலில் பருக்கள் தோன்றிடும்.

உடல் காரணங்கள்:

சில நேரங்களில் நாம் முகத்தை முறையாக பராமரித்தாலும் சிலருக்கு பருக்கள் தோன்றுவதுண்டு, இதற்கு காரணம் உங்கள் உடலில் சிபாசியஸ் சுரப்பி அதிகமாக சுரப்பது தான். இது ஓவர் ஆக்டிவாக இருந்தாலும் நம் முகத்தில் பருக்கள் உண்டாகும்.
குறிப்பாக பருவ வயதில், மாதவிடாய் காலங்களில் இந்த சுரப்பி அதிகமாக சுரக்கும். அதனால் பெண்களுக்கு சரியாக பருவ வயது வரும் போது முகத்தில் பருக்கள் உண்டாகிறது.

பின் விளைவுகள்:

இந்த சிபாசியஸ் சுரப்பி முகத்தில் தான் அதிகமாக இருப்பதால் பருக்களும் பெரும்பாலும் முகத்திலேயே தோன்றுகிறது. பருக்களில் பல வகைகள் இருக்கின்றன. சிலருக்கு மிகச்சிறிய அளவில் இருந்தாலும் சிவந்திருப்பது,அப்பகுதியில் அதிகமாக எரிச்சல் உண்டாவது, தொட்டால் வலி ஏற்படுவது, அல்லது வீக்கம் என பிற தொல்லைகலும் சேர்ந்தே இருக்கும்.

சிகப்பு அடையாளம்:

பெரும்பாலும் பருக்கள் சிகப்பு நிறத்தில் இருக்கும். அதன் நிறத்தைப் பொருத்து அதனுடைய தன்மையை நாம் அறிந்து கொள்ளலாம். சில தினங்களில் பருக்கள் மறைந்தாலும் இந்த சிகப்பு திட்டுப் போல நம் முகத்தில் அப்படியே அடையாளமாக மாறிடும். சில தினங்களில் இந்த சிகப்பு அடையாளம் தானாக மறைய வேண்டும் அப்படி மறையவில்லையெனில் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிற மிக எளிமையான வீட்டு மருத்துவத்தைப் பின்பற்றி அந்த தழும்பை நீங்கள் எளிதாக போக்கிடலாம்.

டீ பேக்:

டீ பேக் பல வகைகளில் நமக்கு பயன் தருகிறது. இதில் க்ரீன் டீ பேக் கூட நீங்கள் பயன்படுத்தினால் கூடுதல் சிறப்பு. இதில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இது நம் உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் நல்லது.
இதிலிருக்கும் டேனின் பருக்களின் வீக்கத்தை குறைக்கவும், சிகப்பு அடையாளத்தையும் போக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

பயன்படுத்தும் முறை:

வெதுவெதுப்பான நீரில் டீ பேகை சில நிமிடங்கள் மூழ்கச் செய்திடுங்கள். பின்னர் அந்த பேகை வெளியே எடுத்து விடலாம். அந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ வேண்டும். அதற்கு முன்னதாக நீங்கள் வெளியே எடுத்திருக்கும் டீ பேகை அப்படியே உங்களுக்கு தொல்லை தந்து கொண்டிருக்கும் பருக்களின் மீது பத்து நிமிடம் வரை வைதிருக்கவும்.

எலுமிச்சை சாறு:

இது மிகச்சிறந்த நிவாரணி என்றே சொல்லலாம். அதோடு இது எளிதாக கிடைக்கவும் செய்திடும் என்பதால் நீங்கள் உடனடியாக இந்த முறையை சோதித்துப் பாருக்கலாம். ஆனால் கவனம், இதில் சிட்ரிக் அமிலம் நிறைந்திருக்கிறது. அதனால் சருமத்தில் சில நேரங்களில் அதிக எரிச்சல் உண்டாகலாம்.
ஏற்கனவே பரு இருக்கும் இடத்தில் எரிச்சல் இருந்தால் எலுமிச்சை சாறு பயன்படுத்த வேண்டாம்.

என்ன செய்கிறது:

பிறர் இதனை தாரளமாக பயன்படுத்தலாம். இதிலிருக்கும் அமிலம் நம் சருமத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் டாக்ஸின்கள், பேக்டீரியா மற்றும் மைக்ரோ ஆர்கானிசத்தை அழித்திடும்.
இது பருவை போக்குவதுடன், நம் சருமத்தை பொலிவுடன் இருக்கச் செய்கிறது. எலுமிச்சை சாறு நேரடியாக பயன்படுத்துவதை விட பிற பொருட்களுடன் கலந்து முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

ஐஸ் க்யூப்:

வீக்கம் இருந்தால் அங்கே ஐஸ் கட்டி வைப்போம். அதே போல சருமத்திற்கும் அதனைப் பயன்படுத்தலாம். வீக்கமுள்ள பருக்கள் உள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியும் ஐஸ் கட்டியைக் கொண்டு லேசாக ஒத்தடம் கொடுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், பருக்கள் மற்றும் அதன் தடங்கள் உடனடியாக மறைந்திடும். நீண்ட நேரம் ஐஸ் கட்டியை முகத்தில் வைத்திருக்க வேண்டாம் கவனம்.

டூத் பேஸ்ட்:

இது மிகவும் எளிதான ஒன்று. அதிகம் கெமிக்கல் சேர்க்காத டூத் பேஸ்ட் இதற்கு பயன்படுத்துங்கள். பேபி டூத் பேஸ்ட் என்றால் பெஸ்ட். பொதுவாக டூத் பேஸ்ட்களில் ட்ரைக்ளோசன், பேக்கிங் சோடா மற்றும் ஹைட்ரோஜன் பெராக்சைட் இருக்கிறது.

ட்ரைனஸ்:

டூத் பேஸ்ட்டை பரு இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம். இது பருக்களை உடனடியாக மறைத்திடும். சாதரண டூத் பேஸ்ட் பயன்படுத்துங்கள் ஜெல் பேஸ்ட் பயன்படுத்த வேண்டாம்.

ஐ ட்ராப்ஸ்:

ஆம், முகத்தில் தோன்றிடும் பருக்களை போக்க ஐ ட்ராப்ஸ் கூட நீங்கள் பயன்படுத்தலாம். பொதுவாக ஐ ட்ராப்ஸ்களில் டெட்ராஹைட்ரோஜோலின் இருக்கிறது. இவை பருக்களைச் சுற்றியிருக்கும் சிகப்புத் தழும்பு,வீக்கம் ஆகியவற்றை போக்கிடும். ஐ ட்ராப்ஸை ஒரு சொட்டு பரு உள்ள இடத்தில் ஊற்றலாம். அல்லது காட்டனில் அந்த மருந்தை நனைத்து அதனை அப்படியே சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்னர் அதனை அப்புறப்படுத்தலாம்.

ஆஸ்பிரின் மாத்திரை:

இதில் ஆண்டி இன்ஃப்லமேஷன் நிறைய இருக்கிறது. அதனை மாத்திரையாக சாப்பிடலாம் அல்லது அதனை பேஸ்டாக்கி முகத்தில் குறிப்பாக பரு உள்ள இடத்தில் தடவலாம். இரவு தூங்குவதற்கு முன்னால் இதனை முகத்தை அப்ளை செய்திடுங்கள். இரவு முழுவதும் முகத்தில் இருக்கட்டும் பின்னர் மறு நாள் காலை எழுந்ததும் கழுவிடலாம். இரண்டு டீஸ்ப்பூன் அளவுத் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஆஸ்ப்ரின் மாத்திரையை போட்டால் சில நிமிடங்களில் கரைந்திடும். அதனை அப்படியே உங்கள் முகத்தில் பரு உள்ள இடத்தில் பூசுங்கள்.

கற்றாழை:

இதில் ஏராளமான ஆண்டிசெப்டிக் மற்றும் ஆண்ட்டி இன்ஃபலமேட்டரி துகள்கள் இருக்கின்றன. பருக்கள், அதனால் ஏற்படுகிற வீக்கம்,எரிச்சல் போன்றவற்றை போக்க இந்த கற்றாழை ஜெல்லை அப்படியே முகத்தில் எடுத்து தடவலாம். இது தழும்பினை போக்குவதுடன், உங்கள் சருமத்தையும் பொலிவாக காட்டிடும்.
POSTED: 14/12/2017, 7:42 pmPOST 1

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum