LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

குழந்தைகளுக்கு இருதய நோய் ஏற்பட்டால் கண்டுபிடிப்பது எப்படி?

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

“இருதயம்” என்பது ஒரு காரணப்பெயர். “இருதடம்” என்பது மருவி “இருதயம்” என்றாகிவிட்டது. தடம் என்பதற்கு வழி அல்லது பாதை என்று பொருள். இருதயத்திலும் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நல்ல ரத்தம் செல்லுகின்ற வழி-தடம். மற்றொன்று சுத்தகரிக்கப்பட வேண்டிய அசுத்த ரத்தம் பாயும் வழி. இருதயம் நான்கு அறைகளை கொண்டது.

இந்த நான்கு அறைகள் வலது புறம் இரண்டு (ஒன்று மேலே மற்றொன்று கீழே). இடது புறம் இரண்டு. அதே போல் ஒன்று மேலே மற்றொன்று கீழே. வலது புறத்தையும், இடது புறத்தையும் பிரிக்க தடுப்பு சுவர் போன்ற அமைப்பு உண்டு. வலது புறம் முழுவதும் சுத்திகரிக்கப்பட வேண்டிய கரிமலவாயு அதிகமுள்ள அசுத்த ரத்தம் இருக்கும்.

இடது புறம் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு அதிகமுள்ள நல்ல ரத்தம் இருக்கும். உட லில் உள்ள கெட்ட ரத்தம் வலது புறத்தில் மேலே அமைந்துள்ள “வலது ஏட்ரியம்” என்ற இடத்திற்கு வரும். அங்கிருந்து கீழே உள்ள “வலது வெண்டிரிக்கிளு”க்கு ரத்தம் செல்லும். கீழே சென்ற ரத்தம் மேலே வருவதை தவிர்க்க மூன்று இதழ்களை கொண்ட வால்வு ஒன்று உண்டு. இதற்கு “ட்ரை கஸ்பிட்” வால்வு என்று பெயர்.

கீழே வலது வெண்டிரிக்கிளுக்கு சென்ற அசுத்த ரத்தம், பம்ப் செய்யப்பட்டு நுரையீரலுக்கு சென்று அங்கு பிராண வாயு பரிமாற்றம் ஆன பின்னர் நல்ல, சுத்தமான ரத்தமாக இடது பக்கம் மேலே உள்ள “இடது ஏட்ரியம்” என்ற பகுதிக்கு வருகிறது. அசுத்த ரத்தத்தில் கரிமலவாயு அதிகம் இருப்பதால் அதன் நிறம் கருஞ்சிவப்பாக இருக்கும். சுத்தமான ரத்தம் நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும்.

இடது ஏட்ரியத்தில் உள்ள சுத்தமான ரத்தம் மேலிருந்து கீழே, உள்ள “இடது வெண்டிரிக்கிளுக்கு” செல்கிறது. கீழிருந்து, ரத்தம் மேலே போகாதவாறு தடுப்பதற்கு இரண்டு இதழ்கள் கொண்ட வால்வு உண்டு, இதை “பை-கஸ்பிட்” என்று அழைக்கிறோம். வலது வெண்டிரிக்கிளிலிருந்து ரத்தம் நுரையீரல் வரைதான் செல்லவேண்டும், அதற்கு குறைந்த அளவு அழுத்தம் போதும். ஆகையால் அதன் சுவர்கள் மெல்லியதாக இருக்கும்.

ஆனால் இடது வெண்டிரிக்கிளிலிருந்து நல்ல ரத்தம் உடம்பில் உள்ள, அனைத்து பாகங்களுக்கும் செல்லவேண்டும். ஆகையால் அதிக அழுத்தம் வேண்டும், அதனால் இடது வெண்டிரிக்கிளின் சுவர்கள் தடிமனாக இருக்கும். குழந்தைகளுக்கு இருதய நோய் பிறவியிலே இருக்கலாம். பிறந்த பின்னரும் வரலாம். அந்த அடிப்படையில் குழந்தைகளுக்கு வரும் இருதய நோயை இரண்டாக பிரிக்கலாம்.

1: உடம்பு “நீலம்பாரிக்கும்” நோய். இதை “சயனாடிக்” என்று கூறுவர்.

2: நீலம் பாரிக்காத அதாவது “ஏ-சயனாடிக்” நோய். சயனாடிக் வியாதிகளில் அசுத்த ரத்தம், நல்ல ரத்தத்தோடு கலந்து விடுகிறது, இதனால் உடலில் நீல நிறம் பாய்கிறது. குழந்தைகளுக்கு பிறவியிலேயே வரும் இருதய நோய்களைப் பற்றி முதலில் பார்ப்போம். இருதயம் வலது, இடதாக பிரிக்கப்படுகிறது என்று பார்த்தோம் அல்லவா. அந்த தடுப்பு சுவர் முழுவதுமாக மூடாமல் சிறிய இடைவெளி, துவாரம் போன்று இருக்கும்.

இதைத்தான் “இருதயத்தில் ஓட்டை” என்று கூறுவார்கள்.
இருதயத்தின் மேல் பகுதியான இரண்டு ஏட்ரியத்தின் நடுவே இந்த துவாரம் இருந்தால் இதை “ஏ.எஸ்.டி” என்றும், கீழே உள்ள இரண்டு வெண்டிரிக்கிளின் இடையே உள்ள தடுப்பு சுவரில் இந்த துவாரம் இருந்தால் அதை “வி.எஸ்.டி” என்றும் கூறுகிறார்கள். இருதயம் துடிக்கும் பொழுது சுருங்கி, விரிவடையும்.

சுருங்கும் பொழுது அழுத்தம் அதிகமாக உள்ள இடது புறத்திலிருந்து, தடுப்பு சுவரில் உள்ள துவாரம் (இடைவெளி) வழியாக நல்ல ரத்தம் கசிந்து, கெட்ட ரத்தத்தில் போய் கலந்து விடும். இது மறுபடியும் நுரையீரலுக்குச் சென்று சுத்திகரிக்கப்பட்டு விடும்.

நாளாக, நாளாக ரத்தத்தின் அளவு கூடுதலாக ஆவதால், வலது ஏட்ரியம், வெண்டிரிக்கிள் ஆகியவற்றின் சுவர்களில் சுருங்கி விரியும், இலாஸ்டிக் தன்மை சிறிது சிறிதாக குறைந்து, அதனுடைய அளவு பெரியதாகி விடும். இதனால் நுரையீரலுக்கு ரத்தம் சரியாக போகாது. அதனால் குழந்தைகள் சிறிது ஓடி, ஆடி விளையாடினாலும் மூச்சு வாங்கும்.

ஏதாவது ஒரு காரணத்தால் வலது புறம் உள்ள அசுத்த ரத்தம், இடது புறத்திலுள்ள நல்ல ரத்தத்தில் கலந்து விட்டால் உடல் முழுவதும் சுத்தம் செய்யப்படாத ரத்தம் பரவி நாக்கின் நுனி, உதடுகள் விரல் நகங்களின் கீழே, கரு நீலமாக மாறும். இதற்கு “சயனாடிக்” வியாதி என்று கூறுவர். இந்த குழந்தைகள் சிறிது அழுதாலும், நடந்தாலும் உடனே உடலில் மேலே சொன்ன இடங்கள் நீல நிறமாக மாறிவிடும், மூச்சு திணறல் ஏற்படும்.

குழந்தைகளுக்கு பொதுவாக காணப்படும் மற்றொரு வியாதி “எம்.வி.பி.எஸ்” எனப் படுகிறது. அதாவது இடது புறம் உள்ள இரண்டு இதழ்களை கொண்ட மைட்ரல் வால்வு களில் ஏதேனும் ஒரு இதழோ அல்லது இரண்டு இதழ்களுமோ, நீளம் அதிகமாக இருக்கும். இதனால் சரியாக மூடாமல், சற்று உள்நோக்கி மடங்கிவிடும். இதனால் நெஞ் சில் படபடப்பு, மயக்கம், பயம் போன்றவை தோன்றும்.

ஆசியாவில், அதிலும் இந்தியா வில் அதிகம் காணப்படும் வியாதி. பிறவியிலே குழந்தைகளுக்கு இது போன்ற பல வியாதிகள் இருக்கும். சில நோய்கள் பிறந்த பிறகு தொத்து வியாதிகளினாலோ அல்லது மற்ற காரணங்களினாலோ வருகின்றன. குழந்தை பிறக்கும் பொழுது, தாய்க்கு பால்வினை நோய் இருப்பின் மைட்ரல் வால்வு சுருங்கிப்போய்விடும்.

அல்லது மரபு அணுக்களின் மாறுதலினால் மூட்டு வாதம்- ருமாட்டிக் ஜுரம் வந்தால் அது இருதயத்தை மிகவும் பாதிக்கும். பொதுவாக சில குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வரும். முட்டி வீங்கும், கை கால்களில் வலி என்று கூறும். சாதாரண ஜுரம் என்று நினைத்து அலட்சியமாக இருக்கக்கூடாது. குழந்தை ஓடி ஆடி விளையாடுவதால் கால்வலி என நினைத்து அலட்சியமாக இருக்கக்கூடாது.

உடனே மருத்துவரிடம் சென்று ரத்தப் பரிசோதனை செய்து ருமாட்டிஸம் இருக்கா இல்லையா என்பதை தீர்மானித்து, அப்படி இருந்தால் அதற்கான மருந்து மாத்திரைகளை தந்தால் இருதயத்தை காப்பாற்றலாம். விளம்பரங்களின் கவர்ச்சியில் மயங்கி, கொழுப்பு அதிகமாக உள்ள தின்பண்டங்களையும், பாஸ்தா, பீசா, பர்கர், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை தினமும் அதிகமாக சாப்பிடுவதாலும், உட்கார்ந்த இடத்திலேயே கணினியில் வீடியோ கேம்ஸ் ஆடுவதாலோ, உடல் எடை கூடுகின்றது.

இதனால் பல இருதய நோய்கள் எளிதில் சின்ன வயதிலேயே வருகின்றன. சில குழந்தைகள் அசுத்தமான கலப்படமுள்ள, ஐஸ் மற்றும் ஐஸ் கட்டிகளை சாப்பிடு கின்றனர். இதனால் தொண்டையில் உள்ள டான்சில்களில் கிருமிகள் தாக்கி, டான்சில் சீழ் பிடித்து, ஜுரம் வரும். இப்படிவரும் சில கிருமிகள் இருதயத்தையும் தாக்கும். இந்த நோய்களுக்கான பொதுவான

அறிகுறிகள் : மூச்சு திணறல், குறைவான உணவு உட்கொள்ளுதல், அதிகமாக வியர்த்தல், உடல் எடை மிகவும் கூடுதலாக இருத்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், உடல் நீல நிறமாக மாறுதல், நடுக்கம், நெஞ்சில் பட படப்பு ஏற்படுதல், நினைவு இழந்து போகுதல், அடிக்கடி, இருமல், ஜுரம் வருதல், முட்டி வீங்கி, ஜுரம் வருதல். ஆரம்ப நாட்களிலேயே, அறிகுறிகளை அறிந்தால் சிகிச்சை பெற்று சரி செய்திடலாம்.
POSTED: 14/9/2015, 9:19 pmPOST 1

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum