LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

மஞ்சள்-ன் மருத்துவக் குணங்கள்

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

இந்தியக் கலாசாரத்தில் மஞ்சளுக்கு முதலிடம் அளிக்கப்படுகிறது. வாயிற்படிகளில் மஞ்சள் பூசுவதற்கும் மஞ்சள் கரைத்த தண்ணீரை வீடுகளில் தெளிப்பதற்கும் அதில் உள்ள கிருமிகளை அழிக்கும் தன்மையே காரணம். மஞ்சள் நிறத்துக்கு நுண் அறிவையும், புத்தி சாதுர்யத்தையும் அதிகப்படுத்தும் திறன் உண்டு என்றும் அதன் வாசனை மன நிம்மதியைத் தரும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இது உணவுகளில் பயன்படுத்துகின்ற ஒரு சாதாரணப் பொருளாக மட்டுமின்றி, உலக நாடுகளே பிரமிக்கின்ற அளவு மருத்துவத் தன்மை கொண்டுள்ளது. அந்த மஞ்சளை எளிய முறையில் பயன்படுத்தி அதன் அபார ஆற்றலைப் பெற்று உடலினை உறுதி செய்வோம்!

என்ன செய்ய வேண்டும்?

இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை எடுத்து சூடான பாலிலோ அல்லது நீரிலோ போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கவும்.

என்ன பலன்?

நிறத்தைக் கூட்டும் வைட்டமின்கள் இருப்பதால், உடலுக்கு நல்ல நிறத்தையும் மேனி எழிலையும் உண்டாக்கும்.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை மஞ்சளுக்கு உண்டு.

சூரியனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் பாதிப்பில்லாமல் தோலினைப் பாதுகாக்கும் அற்புதமான சக்தி மஞ்சளில் அடங்கியிருக்கிறது.

மஞ்சளில் உள்ள குர்குமின் புற்று நோய் வருவதைத் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

சளி, ஜலதோஷம், மூக்கடைப்பு, வறட்டு இருமலைக் கட்டுப்படுத்தும்.

மிகச் சிறந்த கிருமிநாசினியாக இருப்பதால் நோய்த்தொற்றில் இருந்து நம்மைக் காக்கிறது.

வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி பெருமளவில் உள்ளது.

யாருக்கு எல்லாம் முக்கியம்?

உடல் நலனில் அக்கறை வைத்து, கிருமித்தொற்றின் பிடியில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள நினைக்கும் அத்தனை பேருக்கும் முக்கியம்தான்.
POSTED: 8/12/2015, 3:41 amPOST 1
avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

இந்திய உணவுகளில் சேர்க்கப்படும் ஒரு மசாலா பொருள் தான் மஞ்சள். இத்தகைய மஞ்சளானது உணவிற்கு நிறத்தை மட்டும் கொடுப்பதில்லை. மாறாக பல்வேறு நன்மைகளையும் வழங்குகிறது.

இத்தகைய மஞ்சளானது அக்காலத்தில் இருந்து இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் பலவற்றில், மஞ்சளில் உள்ள நோயெதிப்பு அழற்சி தன்மையினால், மஞ்சளானது காயங்களை சரிசெய்ய உதவுவதுடன், புற்றுநோய் முதல் அல்சைமர் வரை பல உடல்நல பிரச்சனைகளையும் குணப்படுத்த பெரிதும் உதவியாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன.

ஆகவே அத்தகைய பொருளை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று அனைவரும் நிச்சயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து இனிமேல் தவறாமல் மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

கல்லீரலை சுத்தப்படுத்தும்

மஞ்சளை உணவில் சேர்த்துக் கொண்டால், கல்லீரலில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, கல்லீரலானது சுத்தமாக இருக்கும்.

அல்சைமர் நோயைத் தடுக்கும்

மஞ்சள் தூளில் உள்ள மற்றொரு நன்மை என்னவென்றால், அதனை உணவில் சேர்த்து வந்தால், மூளையில் அமிலாய்டு என்னும் பிளேக் உருவாவது தடுக்கப்பட்டு, இதனால் மறதி நோயான அல்சைமர் நோய் ஏற்படுவது தடுக்கப்படும்

புற்றுநோயை தடுக்கும்

மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, பல வகையான புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.

நாள்பட்ட மூட்டு வலி

மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், நாள்பட்ட மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் தான் ஆயுர்வேத மருத்துவத்தில் மூட்டு வலியைக் குணப்படுத்த மஞ்சளைப் பயன்படுத்துகின்றனர்.

எடை கட்டுப்பாடு

மஞ்சளானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மன இறுக்க நிவாரணி

சீன மருத்துவத்தில் மஞ்சளை மன இறுக்கத்தை சரிசெய்யும் சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். எனவே இந்த பொருளை உணவில் தவறாமல் சேர்த்து வந்தால், அது மன இறுக்கத்தில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும்.

கீல்வாதம்

மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மையானது இருப்பதால், இது கீல்வாதம் ஏற்படுவதைத் தடுக்கும். ஆகவே கீல்வாதம் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், மஞ்சளை உணவில் சேர்த்து வாருங்கள்.

எலும்புப்புரை

மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, பிற்காலத்தில் எலும்புப்புரை போன்ற முதுகு எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.
POSTED: 8/12/2015, 3:49 amPOST 2

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum