LUCKY PROMOTION
NETORGIN AD CONTAINER
Advertise Now!
LATEST TOPICS UPDATES

Advertising banner 250x250Advertising banner 250x250

அகத்தி

From: 'Medicine of India'

avatar

Medicine of India
avatar

Medicine of India

Posts : 234

Points : 663

Join date : 2015-09-14


Developer

அகத்தை சுத்தப்படுத்துவதால் அகத்தி என பெயர் வந்தது.
.
”மருந்திடுதல் போகுங்காண் வங்கிரந்தி வாய்வாம்
திருந்த அசனம் செரிக்கும்- வருந்தச்
சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளும்
அகத்தியிலை தின்னு மவர்க்கு."
               
                                        -   குணபாடம்

அகத்தியை உண்ணில் இடுமருந்து என்னும் மருந்திடுதல் எனும் தோஷத்தில் இருந்து விடுதலையும் , பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்; ஆகாரம் எளிதில் ஜீரணமாகும் .வாயு உண்டாகும் என்கிறது .இதன் பொதுவான குணங்கள் இலகு மலகாரி , சமனகாரி ( மூன்று தோஷங்களையும்  சமன்
செய்யும் ), விஷ நாசகாரி..
அகத்தி என்று தமிழில் அழைக்கப்படும் இம்மரம் ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. உடலின் உட்புற உஷ்ணத்தைத் தணிப்பதால், அகம்+தீ=அகத்தீ என்று அழைக்கப்பட்டதாக தமிழறிஞர்கள் கூறுகின்றனர். பலதரப்பட்ட மண்வகைகளிலும் வறட்சியைத் தாங்கி வளரும் தன்மையுடையது இம்மரம். ஆனாலும், கரிசல் மண் இதற்கு மிகவும் ஏற்றது. மிக வேகமாக வளரும் தன்மையுடையது. இது 6 முதல் 9 மீட்டர் உயரம் வரை வளரும். இதில் சாளை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக, அகத்தி வெள்ளை நிறத்தில் பூக்கும். சிகப்பு நிறத்தில் பூக்கும் அகத்தி சிவப்பகத்தி என அழைக்கப்படுகிறது
.அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது
           இதன் இலைகள் வாய்ப்புண், தொண்டைப்புண் மற்றும் குடல்புண்களை ஆற்றுகிறது. மேலும், பித்தம், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்யும் தன்மையுடையதாக இருப்பதால் இதை தோட்டங்களில் பயிராக வளர்க்கின்றனர். வெற்றிலை, மிளகு தோட்டங்களில் கொடிகளின் தாங்கியாக (ஊடுபயிராகவும்) இது வளர்க்கப்படுகிறது.. இதில் 33 சதவீதம் கச்சாபுரதம் உள்ளது. வேறு நோய்களுக்கு மருந்து சாப்பிடும் போது அகத்தி கீரையைச் சாப்பிடக் கூடாது என்பார்கள். காரணம், அகத்தி மருந்தின் தன்மையைக் குறைத்துவிடும்.
           இம்மரத்தின் பட்டையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இதன் பட்டையிலிருந்து பெறப்படும் சாறு (டானின்) தயாரிக்க தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகிறது. அகத்தி இலையை ஆடுகள் விரும்பி உண்கின்றன. இந்தியாவில் அசாம், வங்காளம், பஞ்சாப், ஆந்திரா மற்றும் தமிழ் நாட்டில் பரவலாக இது பயிர் செய்யப்படுகிறது.
           இதன் அறிவியல் பெயர் செஸ்பானியா க்ரான்டிஃப்ளோரா (Sesbania grandiflora) என்பதாகும்.

   அகத்திப் பட்டையின் சாறு சிரங்குக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
   வேர் மூட்டுவலிக்கு மருந்தாக அரைத்துப் பயன்படுத்தப்படுகிறது
   
   அகத்தியில் சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற மூன்று அகத்திகளும் உணவுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை. உண்ணும் அகத்தியில் இரண்டு அகத்திகளே உள்ளன. ஒன்று வெள்ளை நிறப் பூக்களை உடையது. இதனையே பொதுவாக அகத்தி என்ற பெயரால் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென அழைப்பார்கள். பொதுவாக அகத்தியும், செவ்வகத்தியுமே உணவாக, மருந்தாகப் பயன்படுகின்றன.
   அகத்தி மரம்போன்று 6 முதல் 9 மீட்டர் (20 அடி முதல் 30 அடி) உயரம் வளர்ந்த போதிலும் இது செடியினைத்தைச் சேர்ந்ததே ஆகும். மிக விரைவில் வளரக்கூடிய பயிர் வகையைச் சார்ந்தது இச்செடி. ஆயினும் நீண்ட நாட்கள் வாழக்கூடிய தன்மை பெற்றதில்லை.
   பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. குறிப்பாகத் தென்னிந்தியாவில் இச்செடியில் வெற்றிலைச் கொடிக்கால்களில் வெற்றிலைக்கு நிழல் தருவதாகவும் வெற்றிலைக் கொடிக்குக் கொழு கொம்பாக உதவவும் பயிர் செய்கிறார்கள்.
   அகத்திக் கீரை உணவாகப் பயன்படுகிறது. இக்கீரையை வேகவைத்து பொரியலாகச் செய்துண்பர். கீரையுடன் தேங்காயைச் சேர்த்துக் தாளிதம் செய்து  உண்ணலாம். மற்றும் பருப்புடன் சேர்த்து வேகவைத்து உண்பதும் உண்டு. இதனைக் குழம்பாகவும், மிளகு நீர் செய்தும் உண்ணலாம்.
   அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்களும் மருத்துவ நூலாகும் கூறியிருக்கின்றனர்.
   இக்கீரை கால்நடைகளுக்கும் கோழிகளுக்கும் நல்ல தீவனமாகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு, கோழி உணவோடு காய்ந்த அகத்திக் கீரையைச் சேர்த்து தீவனமாகக் கொடுத்தால் குஞ்சுகள் நன்கு வளர்ச்சி பெறுகின்றன.
   கால்நடைகளுக்கு இக்கீரையத் தீவனமாகக் கொடுத்தால் அதிகமாகப் பால் கறக்கிறது என நம்பப்படுகிறது. ஆனால் இது ஒரு தவறான கருத்து என விஞ்ஞான ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.
   அகத்திக் கீரையைத் தானமாகக் கொடுப்பது மிகவும் சிறப்புடைய செய்கையாகக் கருதப்படுகிறது. அதிலும் பசுக்களுக்குக் கொடுத்தல் பூர்வ-கர்மவினைகள் யாவும் விலகும் என்பர். ஆனால் இக்கீரையைத் தின்று கொண்டிருக்கும் கறவை மாட்டின் பாலில் உடலுக்கு நன்மை தரும் அனேக நற்குணங்கள் நிரம்பி இருக்கும். இப்பாலைச் சாப்பிடுவதால் அகத்திக் கீரையை உண்பதால்  உண்டாகும் பலன்கள் அனைத்தும் கிடைக்கும்.
   இக்கீரையில் அடங்கியுள்ள புரதச்சத்து மிகச்சிறந்த புரதமாகக் கருதப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.
   அகத்திக் கீரையில் 73 விழுக்காடு நீரும் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும் 2.1 விழுக்காடு தாதுப்புக்களும் இருக்கின்றன. இதில் 2.2 விழுக்காடு நார்ச்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 விழுக்காடு இந்தக் கீரையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
   சக்தியைக் கொடுக்கும் ஆற்றல் இக்கீரையில் அதிகம் இருப்பதைக் காணலாம். 93 கலோரி சக்தியைக் கொடுக்க வல்லது. நூறு கிராம் கீரையில் 1,130 மில்லிகிராம் சுண்ணாம்புச் சத்தும், 80 மில்லிகிராம் மணிச்சத்தும் 3.9 மில்லிகிராம் இரும்புச் சத்தும் அடங்கி இருக்கின்றன.
   இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். உயிர் சத்தான வைட்டமின் A, நூறு கிராம் கீரையில் 9, 000 உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லிகிராமிலும், ரைபோ பிளேவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் C 169 மில்லி கிராம் இருக்கின்றன.
   அகத்தியின் இளம்பூவும், மொட்டுக்களும் உணவாகச் சமைக்க உதவுகின்றன. பொதுவாக இப்பூவை தனியாகச் சமைத்து உண்பதில்லை. ஆனால் வடநாட்டில் பூவையே தனியாகச் சமைத்துண்கின்றனர்.
   இதன் காயையும் கறி சமைத்து உண்ணலாம். அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன.
   அகத்திக் கீரை குடலில் தேங்கும் மலம் மற்றும் நிணநீர் ஆகிய அசுத்தங்களைச் சுத்தம் செய்யும் ஆற்றல் பெற்றது மலர்ச்சிக்கலை நீக்கி மலத்தை உடைத்து வெளியேற்றும் தன்மை பெற்றது.
   அகத்திக் கீரை பித்தச் சூட்டையும் தணிக்க வல்லது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும். தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும். இக்கீரை காய்ச்சலைக் குறைத்து  உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையைது.
   வெய்யிலில் சுற்றி அலைபவர்கள், தேயிலை, காப்பி போன்ற பானங்களைப் பருகிப் பித்தம் அதிகப்பட்டவர்கள், மலச்சிக்கல் உள்ளோர் அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை உண்பது நல்லது.
   இடு மருந்துகளின் வேகம் தணிய வயிற்றைவிட்டு இடு மருந்துகள் கழியவும் இந்த அகத்தி மிகவும் பயன்படுவதாக நம்பப்படுகிறது.
    வாரம் ஒருமுறை அகத்தியை உபயோகித்தால் தேகத்தில் இருக்கும் உஷ்ணம் குறையும்;கண்கள் குளிர்ச்சியாகும்;.மலம் இலகுவாகப்  போகும்;சிறுநீர் தடையில்லாது தாராளமாகப்  போகும்; நீரடைப்பு, பித்தமயக்கம் இவை நீங்கும் .அடிபட்டு ரத்தம் கசியும் ரணங்களுக்கு அகத்தியை அரைத்து வைத்து ரணத்தில் கட்டினால்  விரைவில் ஆறும்;  சீழ்   பிடிக்காது. குடற்புண் குணமாக:

   அகத்திக்கீரை 2 கைப்பிடி அளவு, வெங்காயம் 50 கிராம், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை தேவையான அளவில் எடுத்து தட்டி, கீரையுடன் சேர்த்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க விட்டு, பாதியாகச் சுண்டச் செய்து இறக்கிவிடலாம். இந்த அகத்திக்கீரைச் சூப்பை வாரம் மூன்று நாள் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வர, எப்பேர்ப் பட்ட குடற்புண்ணும் குணமாகும்.

   கண்ணோய்கள் விலக:

   கண்ணைப் பற்றிய அத்தனை நோய்களுக் கும் அகத்தியே நன்மருந்தென்றால் மிகையல்ல. இன்றும் கிராமங்களில் "மெட்ராஸ் ஐ' என நாம் குறிப்பிடும் கண்ணோய் வந்தால், அகத்தியே மருந்தாய் பயன்படுத்தப்படுகிறது.

   பெரும்பாலும் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கு உடம்பில் உண்டாகும் அதி உஷ்ணமும் அதனைச் சார்ந்து உண்டா கும் தொற்றே (ஒய்ச்ங்ஸ்ரீற்ண்ர்ய்) காரணமாகிறது. கண் சிவந்து, வீங்கி, நீர்வழிந்து, வலியை உண்டாக் கும். இத்தகைய கண்ணோய்க்கு அகத்தி இலையை கண்களில் இரண்டு, மூன்று மணி நேரம் வரை ஒற்றியெடுத்து வர கண் சிவப்பு மாறி, வீக்கம் குறைந்து, வலி மறைந்து கண்ணோய் விலகும்.

   கால்வெடிப்புகள் மறைய:

   அகத்திக்கீரையையும், மருதாணி இலை யையும் சமஅளவில் எடுத்து விழுதாய் அரைத்து கால்வெடிப்புகளில் பற்றுப்போட வெடிப்புகள் மறையும். இதேபோல் அகத்திக்கீரைச் சாற்றை சேற்றுப்புண்களில் தடவி வர புண்கள் விரைவில் ஆறிவிடும். உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி இலையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாய் அரைத்துப் பூசி வர தேமல் முற்றிலுமாய் மறையும்.

   சோரியாஸிஸ் குணமாக:

   சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.

   அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.

   சிறுநீர் பிரிய:

   கிராமப்புறத்தில் அகத்திக்கீரைக்கு தனி மதிப்பும், மரியாதையும் இருப்பதை இன்றும் காணலாம். உடல் உஷ்ணம் காரணமாக உண்டாகும் நீர்ச்சுருக்கு, மாரடைப்பு, நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து வருதல் போன்ற குறைபாடுகளுக்கு மிக எளிய மருத்துவ முறையை கிராம மக்கள் கையாளுகின்றனர்.

   அகத்திக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து, தண்ணீர் கணிசமாய் ஊற்றி அவித்து, நீரை வடிகட்டி ஒரு டம்ளர் எடுத்து, அத்துடன் பழைய சாதத்துடன் கலந்த நீர் ஆகாரத்தையும் எடுத்து ஒன்றாய்க் கலந்து அருந்துகிறார்கள். மேற்சொன்ன நோய்கள் எல்லாம் உடனே சரியாகி விடுகிறது.

   தலைவலி தீர

   அகத்தி இலைச்சாற்றை மூக்கில் ஓரிரு துளிவிட, தலைவலி உடனே தீரும். அகத்திக்கீரையுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து தலை உச்சியில் இருபது நிமிட நேரம் வைத்துவர, தலைவலி, தலைபாரம் போன்ற குறைபாடுகளும் விலகும்.

   அகத்திப் பூவை மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, மல்லி இலை சேர்த்து கசாயமிட்டுச் சாப்பிட்டால் மூக்கிலிருந்து உண்டாகும் ரத்த ஒழுக்கு உடனே விலகும்.

   அத்திமரப்பட்டையை முறைப்படி கஷாய மிட்டுச் சாப்பிட்டுவர, அம்மைக் காய்ச்சல், விஷக்காய்ச்சல், பெரியம்மை போன்றவை குணமாகும். மேலும் தண்ணீர் தாகம், கை, கால், உடல் எரிச்சல், ஆண் உறுப்பு வேக்காடு, தொடை இடுக்குகளில் உண்டாகும் வேக்காடு போன்றவை விலகும்.

   மருந்தை முறிக்கும் அகத்தி

   அகத்திக்கீரைக்கு மருந்தை முறிக்கும் தன்மை உள்ளதாக சித்தர்கள் குறிப்பிடு கின்றனர். எனவே நாள்பட்ட நோய்களுக்குத் தொடர்ந்து மருந்து எடுத்து வருபவர்கள் இதனைச் சமைத்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். குடற்புண்ணால் பாதிக்கப்பட்ட வர்கள், வயிற்று நோய் உள்ளவர்கள் இதனை மிகக் கவனமாய் சமைத்துச் சாப்பிட வேண்டும். தத்தமது செரிப்புத் திறனுக்கு ஏற்ற வகையில் அகத்திக்கீரையைச் சாப்பிடலாம்.

   அடிக்கடி இந்தக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் ரத்தத்தைக் கேடுறச் செய்து, உடலில் சொறி, சிரங்கு நமைச்சலை உண்டாக்கிவிடும். வயிற்றுக்கடுப்பு, பேதியும் உண்டாகலாம். அகத்திக்கீரை உள்மருந்தாய் உபயோகிப்பதைவிட வெளிமருந்தாய் உபயோகிக்கும் பொழுது வியத்தகு பலனைத் தருகிறது.

சீமை அகத்தி
.
இந்த சீமை அகத்தி தமிழ் நாட்டில் தென் மாவட்டத்தில் அதிகமாகஉள்ளது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ளஇடத்தில் நன்கு வளரும். இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும்.இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து வளரும் இந்தத் தாவரம் பூர்வீகம் மெக்சிகோ நாடு. இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது.இது அமேசன் மழைக் காடுகளில் அதிகமாகக்காணப்படும் மேலும் பெரு, பிரேசில் , பிரன்சுகயானா, கயானா, வெனிசுலா, கொலம்பியா, ஆப்பிரிக்கா, ஆஸ்ட்ரேலியா,அமரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும். இது அழகுச் செடியாகவும்வளக்கப்படுகிறது. இதன் பூக்கள் மெழுகுவத்தி வைத்தால் போன்றுமஞ்சள் நிறமாக கொத்தாக அழகாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் இரவில் மூடிக்கொள்ளும் வாகை இலைபோன்று. பூக்கள் உதுர்ந்து நீண்ட காய்கள் இருபக்கதுதிலும்அடுக்காகக் காய்க்கும்.இதன் விதைகள்நீள் சதுர வடிவில் அமைந்திருக்கும். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள்:
சீமைஅகத்திச் செடியின் இலைகள் அதிகமாக மருத்துவத்திற்குப் பயன்படுகிறது.தோல் வியாதிகளைக் குணப்படுத்துகின்றது. வண்டுகடி, படர்தாமரை, சொறிசிறங்கு, கற்பப்பை கோளாறுகள் பாக்டீரிய்,பூஞ்சல்களைக் கொல்லவும், இரத்த அழுத்தம் குறைவதைக் குணப்படுத்தவும்,வயிற்றுவலி, காய்ச்சல், ஆஸ்த்துமா, அல்சர், பாம்புக்கடி, சிறுநீர் எழிதாகக்கழிய, நுரையீரல் நோய்கள், இரத்த சோகை, மாதவிடாய் சம்பந்தமான நோய்கள், மேலும் மேக நோயான சிபிலிஸ் போன்றவைகளையும் குணப்படுத்தும். இதன் இலையில் தடுப்பு சக்தி இருப்பதால் சோப்பு,ஷேம்பு,முகப்பூச்சாகவும் பிலிப்பெயின்சில் பயன்படுத்துகிறார்கள்.
வண்டு கடியைக் குணப்படுத்த குறிப்பிட்டஅளவு புதிதாகப் பச்சையாக உள்ள இலையைபறித்து எலுமச்சஞ்சாறுடன் சேர்த்து நன்குஅரைத்து வண்டு கடிமீது காலை, மாலைதடவினால் விரைவில் குணமடையும்.
இதன் மஞ்சள் பூக்களைப் பறித்து முறைப்படிகசாயம் வைத்துக் கொடுக்க சிறு நீர் கோளாறுகள் நீங்கி தடையின்றி வெளியேறும்.

சீமைஅகத்தி பட்டையை எடுத்து முறைப்படி ஊரவைத்து கசாயமாகக் காய்ச்சி வடிகட்டிதினம் காலை, மாலை இரண்டு வேளை உட்கொண்டால் மேக வியாதிகள் குணமடையும், வலியைப் போக்கும், மலக் கழிவு இலகுவாக வெளியேறும்.

படர் தாமரையைப் போக்க உடனேபறித்த சீமை அகத்தி இலைகள் அறைத்து அதற்கு சமனெடை தேங்காய்எண்ணெயில் சேர்த்துத் தினந்தோறும்இரண்டு தரம் அழுத்தித் தேய்க்க குணமடையும்.
அகத்தியை அகத்தீஸ்வரனாகவே காணுங்கள்.
POSTED: 15/9/2015, 4:58 pmPOST 1

கருத்தை எழுத உள்நுழையவும்.

You cannot reply to topics in this forum